Voyager spacecraft and Nuclear Fissure | எப்படி இவ்வளவு தூரம் போகுது இந்த வாயேஜர்

Voyager Spacecraft details in tamil
Voyager Space craft Image. Artificial

வாயேஜர் விண்கலங்கள் எப்படி இவ்வளவு தூரம் செல்கின்றன? என பலருக்கும் பல கேள்விகள் எழுந்திருக்கும் இதற்கு விடையாகத்தான் இந்த பதிவு இருக்கப்போகிறது, என்றால் அது மிகையாகாது!!!

இந்த வாயேஜர் விண்கலங்கள் 1977ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டவை,  என்பது நமக்குத் தெரியும் ஏற்கனவே நாசாவின் விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தில் மிகப்பெரும் கிரகங்களான நான்கு பெரிய கிரகங்களை அதாவது சனி, வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களை தாண்டி சூரிய குடும்பத்தை பார்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள். ஆகவே அந்த காலத்தில் நாசாவில் உள்ள propulsion laboratory விஞ்ஞானிகள் இதில் RTG  ஆர் டி ஜி என்று பெயரிடப்பட்ட ஒருவகையான மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையான இயந்திரங்கள் அணுக்கரு பிளவு அதாவது (Neclure Fissure) என்ற ஒரு நிகழ்வினை மையமாக கொண்டு மின்சாரம் தயாரிக்கும், ஒரு வகையான கருவி என்று கூறலாம் இந்த வகையான கருவிகள் வாயேஜர் விண்கலங்கள் மட்டுமில்லாமல் அதற்குப்பின் அனுப்பப்பட்ட பயணியர் 10 பயனியர் 11 நியூ ஹரைசோன் மற்றும் காசினி போன்ற விண்கலங்களிலும் இதே வகையான RTG Generator தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றனர்.

cassini spacecraft rtg unit
காசினியில் பயன்படுத்தப்பட்ட RTG இயந்திரத்தினை சோதித்து பார்க்கிரார் ஒரு பெண்

இந்த வகையான ஆர் டி ஜி இயந்திரத்தில் புளூட்டோனியம் 238 என்று பெயரிடப்பட்ட கதிரியக்கத் தனிமம் பயன்படுத்தப்படுகிறது RTG  இயந்திரத்தில் thermocouple என்ற ஒரு பகுதி இருக்கும் இந்த பகுதியானது இயந்திரத்தில் இருக்கும் கதிரியக்க தனிமத்திற்கும் மற்றும் வெளிப்புறம் இருக்கும் குளிர்ச்சியான விண்வெளிக்கும் இடையே உள்ள வெப்ப நிலை மாற்றத்தை மையமாகக் கொண்டு    விண்கலனுகு தேவையான சக்திகளை பெறுகின்றன.

இந்த plutonium 238 என்ற கதிரியக்க தனிமமானது ஆல்ஃபா துகள்கலை மட்டுமே வெளியிட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்பதனால், வெளியிடக்கூடிய ஆல்ஃபாத் துகளை அந்த ஆர் டி ஜி இயந்திரமே உட்கிரகித்துக் கொள்கிறது இதன்மூலம் விண்கலத்தில் உள்ள மற்ற கருவிகளுக்கு கதிரியக்கம் பாதிப்பு ஏற்படாமல் இது பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அந்த மின்சாரம் தயாரிக்கும் ஆர் டி ஜி இயந்திரமானது மிகவும் பாதிக்கப்படுகிறது.

உண்மையில் 1977 ஆம் ஆண்டு இந்த வாயேஜர் விண்கலங்கள் அனுப்பும்போது இந்த ஆர் டி ஜி கருவிகளின் மூலமாக தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவானது மற்றும் அது சக்தி குறையும் அளவை ஒப்பிட்டு கூறும் பொழுது 0.7% ஓராண்டுக்கு என்று கூறியுள்ளனர். அதாவது ஒரு வருடம் ஆனாலும் அந்த விண்கலத்தில் இருக்கும் சக்தியானது ஒரு சதவீதம் கூட குறைந்து இருக்காது அந்த அளவுக்கு இருந்தது தான் இந்த ஆர் டி ஜி தொழில்நுட்பம் கொண்ட அந்த கால மின்சாரம் தயாரிக்கும் கருவி

thermocouple shows the room temparature while connected to multimer
Thermocouple இயந்திரத்தினை Multimetre உடன் பொருத்தும் போது அறை வெப்ப நிலைய காட்டுகிறது

  புளுடோனியம் 238 என்ற கதிரியக்கத் தனிமத்தின் அரைவாழ் காலம் 87 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது அதாவது இந்த கதிரியக்கத் தனிமம் தனது அணுக்கரு பாதியாக குறைவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் தான்  அரை வாழ் (half Life) காலம் என்று கூறப்படும். RTG இயந்திரத்தின் திறன் மிகவும் குறைந்து வருவதையொட்டி இந்த வகையான விண்கலன் அதாவது வாயேஜர் விண்கலங்கள் 2025-லிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக முழு திறனையும் இழந்து அதாவது மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்து விண்வெளியில் திக்கற்று கிடக்கும் என கருதுகிறார்கள் விண்வெளியாளர்கள்.

கடந்த 2000மாவது ஆண்டில் இந்த ஆர் டி ஜி இயந்திரத்தின் படி இது வெறும் 67 சதவீத மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்வதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

மேலும் இது போன்ற விபரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள ஸ்பேஸ் நியூஸ் தமிழ் டாட் காம் என்ற இணைய தளத்தை தொடர்ந்து பாருங்கள் நன்றி வணக்கம்

நான் தான் வேற யாரு

உங்கள் கருத்து என்ன

https://www.forbes.com/sites/quora/2016/09/14/after-50-years-in-space-voyager-will-go-dark-sometime-before-2030/#227b13106818

No comments