64 satellite launch from one rocket spaceX had a new record | இரண்டாவது உலக சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ் 64 செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது

டிசம்பர் 3ஆம் தேதி, Vandenberg Airforce Station, California .

ஸ்பேஸ் எக்ஸ் இன் falcon 9 rocket ஆனது 64 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி , அதிகமான செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவிய இரண்டாவது விண்வெளி அமைப்பு என்ற பெருமையை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க நாடுகளில் அதிகமான செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் ஏவிய முதல் விண்வெளி அமைப்பு என்ற பெருமையையும் ஸ்பேஸ் எக்ஷ் பெற்றுள்ளது.
SSO-A: Smallsat Expres என்று பெயரிடப்பட்ட இந்த பணியில் உபயோகப்படுத்தப்பட்ட 64 சிறிய ரக செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் குறைந்த அளவில் விண்ணில் ஏவப்பட்டன இதனை low Earth orbit என்று கூறுவர்.

இந்த ஒட்டுமொத்த 64 செயற்கைக்கோள்களும் 34 வகையான வணிக மற்றும் அரசு சார் நிறுவனங்கள் யிருந்து அனுப்பப்பட்டவை.

கூடுதல் தகவல்களாக 64 செயற்கைக்கோள்களில் 49 செயற்கைக்கோள்கள் மிகவும் சிறிய ரக செயற்கை கோள்கள் அதாவது பத்து சென்டிமீட்டர் அளவு உடையாது மற்றும் 1.3 கிலோ கிராம் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோள்கள் ஆகும் மேலும் 23 செயற்கைக்கோள்கள் பல்கலைக்கழக செயற்கைக்கோள்கள் என்றும் 19 செயற்கைக்கோள்கள் புகைப்பட செயற்கைக்கோள்கள் அதாவது imaging satellites. என்றும் Space X கூறியுள்ளது.

மேலும் இதில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சிறியரக செயற்கைக்கோளான ExSeed SAT -1 என்ற செயற்கைகோளும் அதில் இடம் பெற்றுள்ளது இது நமது உள்ளங்கை அளவைப் போன்று இரண்டு மடங்கு உடைய ஒரு ரேடியோ சேட்டிலைட் ஆகும்.

இது அனைத்திற்கும் கூடுதல் தகவல்களாக ஸ்பெஷலானது ஸ்பேஸ் எக்ஸ் இன் பால்கன் 9 rocket ஆனது. திரும்பவும் பத்திரமாக பூமியின் தரைப்பகுதியில் தரையிறங்க வைத்தது தான்.

இந்தியாவின் ஐஎஸ்ஆர்ஓ உம் இதுபோன்ற திரும்பவும் பயன்படுத்த கூடிய வகையிலான ராக்கெட் ஐ 2016ஆம் ஆண்டு பரிசோதனை செய்து பார்த்தது என்பது குறிப்பிட தக்க ஒரு செய்தி.

 

Source

Download Our App

More Posts to Read on:-



No comments