ISRO planning for Venus Mission Shukrayaan and invitation for International payload | இந்தியாவின் புதிய சுக்கிரயான் 1 வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர்


Shukrayaan 1 is a Proposed Space craft for Venus , it will be launched in 2023

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான ஐஎஸ்ஆர்ஓ சர்வதேச அளவில் ஒரு AO (announcement of opportunity) வை வெளியிட்டு உள்ளது, உலகமெங்கும் உள்ள விண்வெளியாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் தங்களது அறிவியல் சாதனங்களை சுக்ரயான் 1 எல் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி 2018 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.

இஸ்ரோ சுக்ரயான் 1

சுக்கிரயான் ஒன்று என்பது 2023 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் விண்ணில் ஏவுவதற்காக திட்டமிடப்பட்ட ஒரு பணியாகும். இந்தியா முதன் முதலில் தனது மங்கள்யான் மிஷன் 2013 ஆம் ஆண்டு விண்ணில் ஏவியது, இதனை interplanetary mission என்று கூறுவார்கள். இந்தியாவின் இச்செயல் உலகளாவிய அளவில் இந்தியாவின் மதிப்பையும் ஐஎஸ்ஆர்ஓ வின் மதிப்பையும் பெருமளவு கூட்டியது அந்த வரிசையில் ஐஎஸ்ஆர்ஓ வின் அடுத்த interplanetary mission தான் ஷுக்ரயான் 1, வெள்ளி கிரகத்திற்கான ஒரு பணி.

ராக்கெட் : GSLV MK 3

எடை : 2500 KG. (proposed)

இடம் : சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் பெங்களூரு

வெள்ளியும் சுக்ரயானும்

வெள்ளி கிரகமான பூமியை ஒத்த கிரகம் என்று கூறுவர் அதாவது பூமியின் அளவு , எடை, வளிமண்டல கலவை, புவியீர்ப்பு விசை போன்றவற்றில் வெள்ளி கிரகமும் பூமி கிரகமும் ஒத்துக் காணப்படும் . சுக்கிரன் 1 ஐ பொறுத்தவரை இது வெள்ளி கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் அதன் உள்ளார்ந்த பகுதிகளை ஆராய்ச்சி செய்யும் (surface and subsurface) என்றும் சூரியனிடமிருந்து வரக்கூடிய சூரிய கதிர்வீச்சு மற்றும் சூரிய காற்று (solar radiation and solar wind) போன்றவற்றையும் இது கவனிக்கும் என்றும் கூறியுள்ளனர்.


சுக்கிரயான் 1 ஐ பொறுத்தவரையில் இது ஒரு ஆர்பிட்டர். இது வெள்ளி கிரகத்தில் இருந்து 500 கிலோ மீட்டர் உயரம் முதல் 60 ஆயிரம் கிலோ மீட்டர் உயரம் வரை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் அதாவது சுக்கிரயான் ஒன்றானது வெள்ளி கிரகத்திலிருது சுமார் 500 km உயரம் முதல் அதிக பட்ச உயரமாக 60,000 km உயரம் வரையில் அதன் சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் என்று அர்த்தம்.

இதில் 12 அறிவியல் சாதனங்களை வைக்கப்போவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது அவையாவன

  1. S-band synthetic aperture radar (SAR)
  2. ADVANCED RADAR FOR TOP SIDE ionosphere AND SUBSURFACE SOUNDING
  3. ULTRAVIOLET IMAGING SPECTROSCOPY TELESCOPE
  4. Thermal camera
  5. Cloud monitoring camera
  6. Venus atmospheric spectro polarimeter
  7. Airglow photometer
  8. Radio occupation experiment
  9. Ionospheric electron temperature analyser
  10. Retarding potential analyser
  11. Mass spectrometer
  12. Plasma wave detector

நீங்கள் ஏதாவது அறிவியல் சாதனங்களை இந்த வெள்ளி கிரகத்தின் சுக்கிரயான் பணியில் இணைக்க நாடினால் அதற்கான AO, April 2017 ஆம் ஆண்டு ஐஎஸ்ஆர்ஓ வால் வெளியிடப்பட்டு அதன் கால நேரங்கள் முடிந்துவிட்டன. இப்போது இஸ்ரோ வெளியிட்டிருக்கும் Ao வானது சர்வதேச அளவில் உள்ள விண்வெளி அவர்களின் அறிவியல் சாதனங்களை இத்திட்டத்தில் இணைப்பதற்காக வெளியிட்டுள்ள அறிக்கையாகும்.

மேலும் 2017ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி 175 கிலோ கிராம் எடையுள்ள அறிவியல் சாதனங்கள் என்ற குறிப்பை நீக்கி 100 கிலோ கிராம் என்று அதன் எடையை குறைத்துள்ளது.



No comments