Voyeger 2 is now in interstellar space confirmed by NASA | சூரிய குடும்பத்தை தாண்டி சென்ற வாயேஜர்-2 விண்கலம் நாசா உறுதி செய்தது
1977 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலம் ஆனது தற்போது நமது சூரிய குடும்பத்தை தாண்டி இன்டர்ஸ்டெல்லார் விண்வெளியில் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
விண்ணில் இந்த விண்கலத்தை ஏவி பல ஆண்டுகள் ஆனாலும் இந்த விண்கலத்தை இன்னமும் நாசா தொடர்பிலேயே வைத்துள்ளது எனினும் ஒருமுறை இந்த விண்கலத்தை தொடர்பு கொள்ள நாசாவாகவே இருந்தாலும் . சரி கிட்டத்தட்ட தோராயமாக 17 மணி நேரங்கள் ஆகின்றன ஒரு சாதாரண செய்தியை கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு, மேலும் அதிலிருந்து செய்திகளை திரும்ப பெற மீண்டும் பல மாதங்கள் எடுக்கின்றது. இருந்தபோதிலும் விண்கலத்தில் உள்ள. (Cosmic Ray monitor) விண்வெளி கதிர்வீச்சு கருவியில் பதிவான தகவல்களின் அடிப்படையில் இப்போது இந்த வாயேஜர்-2 விண்கலம் ஆனது சூரியனின் எல்லைக்குட்பட்ட பகுதியை தாண்டி சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நீங்கள் மேலுள்ள படத்தில் பார்த்தீர்கள் இதை சூரியன் தனது ஆதிக்கம் செலுத்தும் பகுதி என்று கூறலாம் அல்லது ஹீலியோ ஸ்பேர் என்று கூறுவார்கள். நமது கிரகத்தில் பதிவாகும் கதிரியக்கங்கள் அனைத்தும் நமது சூரியனிடம் இருந்து வருவதுதான், மேலும் இந்த விண்கலத்தில் உள்ள கருவி இன் அடிப்படையில் சூரியனின் கதிர்வீச்சின் அளவு குறைந்து வேறுவித கதிர்வீச்சுகளை அது பெற ஆரம்பித்துள்ளது இதனையே சூரிய கதிர்வீச்சு குறைவு அல்லது heliosphere ஐ தாண்டி சென்று விட்டது என்று கருதலாம் , இதன்மூலமே நாசா இந்த விண்கலமானது நமது சூரிய குடும்பத்தை தாண்டி சென்றுவிட்டதாக அறிவிப்பு செய்துள்ளனர்.
Post a Comment