Korolev crater in Mars filled with ICE | பனிக்கட்டியால் உறைந்துள்ள செவ்வாய் கிரக விண்கல் பள்ளம்
Sergei korolev என்பவரின் பெயரை கொண்டு இந்த செவ்வாய் கிரக விண்கல் பள்ளம் பெயரிடப்பட்டுள்ளது. இவரை சோவியத் ரஷ்யாவின் விண்வெளி தொழில்நுட்ப தந்தை என்று கூறுவர் .
1950 முதல் 1966 வரை இவர் சோவியத் ரஷ்யாவிற்கு செய்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கப்படுகிறது. இவரின் பெயராலேயே இந்த விண்கல் பள்ளத்தாக்கு பெயரிடப்பட்டுள்ளது. இவர்தான் முதன்முதலில் ரஷ்யாவின் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கொண்ட ஸ்புட்னிக்-1 என்ற விண்கலத்தை வடிவமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
சரி இப்போது நாம் விண்கல் பள்ளத்தாக்கினை பற்றி பேசுவோம் இந்த விண்கல் பள்ளத்தாக்கு கிட்டத்தட்ட 84 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பெரிய பள்ளத்தாக்கு இந்த பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட ஒரு மைல் (1.8 கிலோ மீட்டர்)அளவுக்கு அடர்த்தியான பணி நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது (இந்த ஒரு மைல் என்பது அதன் மையப் பகுதியில் மட்டும்). மேலும் இந்த பள்ளத்தாக்கில் சுமார் 2200 கியூபிக் கிலோ மீட்டர் ( 2,200 cubic km (530 cu mi)) அளவுள்ள தண்ணீர் உறைந்துள்ளது என்று கருதப்படுகிறது, இந்த அளவானது பூமியில் உள்ள இரண்டு பெரிய ஏரிகளான Lake Erie and Lake Ontario வில் உள்ள நீரின் அளவுக்கு சமமானது என்று கூறுகிறார்கள்.
மேலும் இந்த புகைப்படமானது 2003 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி கழகத்தால் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆர்பிட்டர் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் . இந்த ஆர்பிட்டர் ஆனது 2003 ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்பட்டது. அது ஒரு கிறிஸ்துமஸ் தினம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம், அதேபோல் வரக்கூடிய கிறிஸ்துமஸ் அன்று இந்த 2018 இல் அந்த விண்கலமானது பதினைந்தாம் ஆண்டு நிறைவு செய்திருக்கும் என்றும் அதன் நினைவாக எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தினை பகிர்ந்துள்ளனர் esa (European space agency) விஞ்ஞானிகள்.
இந்த புகைப்படமானது விண்கலத்தில் உள்ள அதிக ரெசல்யூசன் கொண்ட கேமராவால் (High Resolution Stereo Camera) எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் . இந்த கருவியை ESA உக்கு வழங்கியது ஜெர்மன் ஏரோஸ்பேஸ் மையம் (DLR) ஆகும்.
இந்தப் புகைப்படம் ஆனது செவ்வாய் கிரகத்தின் வட துருவப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் மேலும் இந்த ஆர்பிட்டர் அதாவது விண்கலமானது இந்த குறிப்பிட்ட துருவப் பகுதியை கிட்டத்தட்ட ஐந்து முறை சுற்றி வந்துள்ளது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள் . அதன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஒன்றுதிரட்டி இப்பொழுது உங்கள் முன் கொடுத்துள்ளார்கள். இதைத்தான் நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்த்தீர்கள்.
எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ தகுதியான என ஆராய்ச்சி செய்வதற்காக நாசாவும் ஒரு Rover அனுப்ப இருக்கிறது இதனை நாசாவின் 20-20 ரோவர், என்று கூறினார்கள் இதைப்பற்றிய தகவல்கள் விரைவில் உங்களுக்கு வரும் subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்
Post a Comment