Citizen Scientists Find New World 2x Bigger than Earth | பொதுமக்கள் கண்டறிந்த புது கிரகம் | கெப்ளர் தொலைநோக்கி

கெப்ளர் தொலைநோக்கி

நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியானது போன வருடம் அக்டோபர் 30 ஆம் நாள் கைவிடப்பட்டது. ஆனால் அது கைவிடப்படுவதற்கு முன்பு, தன்னிடம் இருந்த இன்றியமையாத தகவல்களை பூமிக்கு தந்துவிட்டு தான் சென்றது.

சிடிசன் சயின்டிஸ்ட்

இந்த தகவல்கலை ஒரு சில பொது மக்கள் தானாக முன் வந்து ஆராய்சி செய்யும் ஒரு குழுவுக்கு பெயர்தான் “சிட்டிசன் சயிண்டிஸ்ட்” என்பது. இந்த குழுவினர் தனது நேரங்களை ஒதுக்கி இந்த கெப்ளரின் தரவுகளை ஆராச்சி செய்து வந்த போது கண்டறிந்த ஒரு பூமி மாதிரியான 2 மடங்கு பெரிய கிரகம் தான் K2-288Bb எனும் கிரகம்.

டாரஸ் விண்மீன் திரள்

இது டாரஸ் என்ற விண்மீன் தொகுப்பில் K2-228 என்ற சூரிய குடும்பத்தில் சுமார் 226 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது தான் இந்த கிரகம்.

இரண்டு நட்சத்திரங்கள்

இந்த சூரிய குடும்பத்தில் 2 நட்சத்திரங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டும் சுமார் 5.1 பில்லியன் மைல் தொலைவில் அமைந்துள்ளன என்றும் (அதாவது நமது சூரியனுக்கும் சனிகிரகத்திற்கும் இருக்கும் தொலைவினை போல் 3 மடங்கு அதிகம்) இவை இரண்டும் M வகை நட்சத்திரங்கள் என்றும் கூறியுள்ளனர். அதில் ஒன்று நமது சூரியனை போன்று பாதியளவு எடையுடையது என்றும் மற்றொன்று 3 இல் 1 பகுதி நமது சூரியனை போல் எடையுடையது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மாதிரி காட்சி

கிரகம் எப்படி

இவர்கள் கண்டறிந்த K2-228Bb என்ற இந்த கிரகமானது அந்த இரண்டு நட்சத்திரங்களின் ஒன்றான எடை குறைந்த நட்சத்திரத்தினை சுமார் 31.3 நாட்களுக்கு ஒரு முறை சுற்றிவருகிறது. மேலும் இந்த கிரகம். அந்த சிறிய நட்சத்திரத்தின் ஹாபிடபுள் (தண்ணீரை திரவநிலையில் வைத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட) பகுதியில் சுற்றிவருவதையும் கண்டறிந்துள்ளனர்.

உயிர் வாழ முடியுமா

நமது பூமியை போன்று 2 மடங்கு பெரியதாக இருப்பதால் இந்த கிரகத்தில் தரைப்பகுதி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இருக்குமாயின் இந்த கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கு அதிக அளவு வாய்ப்புகள் இருக்கும் எனவும் இந்த விஞ்சானிகள் குழு கருதுகிறது. PodCast Can be found Here

Source

No comments