Sombrero Galaxy Tamil facts
சம்ப்ரீரோ கேலக்ஸி
ஆனது பூமியில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரு கேலக்ஸி ஆகும் இதனை நாம் Barred Spiral Galaxy என்று அழைப்போம் Barred Spiral என்றாள் அந்த கேலக்ஸியின் மையத்தில் கோடு போன்று அமைப்பு இருப்பதை குறிக்கும். உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் கீழே உள்ள படங்களை பாருங்கள்.
இந்த சம்ப்ரீரோ கேலக்ஸி ஆனது அதன் மையத்தில் ஒரு பிரகாசமான கருவையும் மிகப்பெரிய மைய கருந்துளையும் கொண்டுள்ளது.
அந்த கேலக்ஸியில் காணப்படும் கருந்துளையானது நாம் இதுவரைக்கும் கண்டுபிடிப்பதிலேயே அதிக எடையுள்ள சூப்பர் மேசிவ் கருந்துளையாகும்.
அதனைச் சுற்றி இருக்கும் கருப்பு நிற தூசு பட்டையானது ஒரு வளையத்தை போன்று செயல்பட்டு இருக்கிறது .
அந்த கருப்பு நிற பட்டையில் காற்று, தூசுகள் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளால் நிறைந்து இருப்பதை கண்டறிந்துள்ளோம் .
இது போன்று இருக்கும் அனைத்து காலக்ஸிகளும் புதிதாக நட்சத்திரங்களை தோற்றுவிக்கும் ஒரு வகையில் உள்ளவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தன்மைகள்
வேறு பெயர்கள் | : M104 (NGC 4594) |
வகை | : சுருள் கேலக்ஸி |
விட்டம் | : 50 ஆயிரம் ஒளி ஆண்டுகள் |
தொலைவு | : 29 மில்லியன் ஒளியாண்டுகள் |
எடை | : 800 பில்லியன் சூரியனின் எடைக்கு சமம் |
விண்மீன் திரள் | : விர்கோ |
உண்மைகள்
இந்த கேலக்ஸி ஆனது விர்கோ சூப்பர் கிளஸ்டரில் இருந்து விலகி செல்லும் கேலக்ஸி களில் ஒன்றாக உள்ளது
இந்த கேலக்ஸியில் மையத்தில் அதிகமாக சுமார் 2000 குலோபுலர் கிளஸ்டர்கள் (Globular Clusters) அதாவது (கொத்தாக இருக்கும் சூரியன்கள்) இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது அதுவும் அதன் மையத்தில் மட்டுமே
இந்த கேலக்ஸியில் நாம் கண்டுபிடித்த கருந்துளையானது இதுவரை நாம் கண்டுபிடித்த கருந்துளைகளிலேயே மிகவும் அதிக எடை உடையது என நம்பப்படுகிறது கிட்டத்தட்ட பில்லியன்களுக்கு சூரியங்களுக்கு சமமானதாக இருக்கலாம்.
இந்த கேலக்ஸி ஆனது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் விண்வெளி மற்றும் வானவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் எளிதாக தெரியும் ஒரு கேலக்ஸி ஆகும் இது விற்கோ மற்றும் கோர்வஸ் என்ற விண்மீன் தொகுப்பிற்கு இடையே பூமியின் வசந்த காலத்திலும் மற்றும் கோடை காலத்திற்கு முந்தைய காலத்திலும் எளிமையாக பார்க்க முடிந்த ஒரு கேலக்சி ஆகும்.
இந்த கேலக்ஸியின் ஒரு பகுதியை தான் நாம் இதுவரை கண்டுபிடித்திருக்கிறோம் ஏனென்றால் நாம் பூமியிலிருந்து பார்க்கும் கோனம் அப்படி
வேறு கேலக்ஸி பற்றி விவரங்களுக்கு யூடியூபில் சொல்லவும்.
Post a Comment