IRNSS Our New Navigation Satellite | இந்தியாவின் புதிய வழிகாட்டி ஒரு பார்வை
IRNSS – Indian Regional Navigation Satellite System
இதன் முதல் செயற்க்கைகோள் IRNSS-1A ஆனது நமது இஸ்ரோவால் 2013 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் நாள் “பி எஸ் எல் வி சி22” வகை ராக்கெட்டின் மூலம் பூமியின் மீது மேல் பகுதியில் கிட்டதட்ட 20,460 கிலோமீட்டர் உயரத்தில் ஜியோ சிங்க்ரனோஸ் (Geosynchronous) வட்டப்பாதையில் இது நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஜியொ சிங்க்ரனோஸ் வட்ட பாதை
ஜியோ சிங்க்ரனோஸ் என்பது, எப்போது ஒரு செயற்க்கைகோளின் சுழற்சி வேகமாது நமது பூமி சுழழும் வேகத்திற்கு ஏற்றதாக அதாவது ஈடாக இருக்குமோ அப்போது அந்த செயற்க்கைகோளானது அந்த நிலப்பகுதியினை நோக்கியதாகவே இருக்கும். அதாவது நமது IRNSS செயற்க்கைகோள்களை பொருத்தவரையில் அவை நமது இந்தியாவின் மீது மட்டுமே முழு கவனமும் செலுத்தும் படியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதனை “இனைநிலை“ சுழற்சி பகுதி என்றும் கூறுவர்
ஜியோ ஸ்டேஸ்னரி வட்டப்பாதை
ஜியோ ஸ்டேஸ்னர் என்பது மேலே சொன்னது போலவேதான் ஆனால் இந்த வகை வட்டபாதையானது சுற்று மேலும் கீழும் சென்றுவரும் . கீழுல்ல படத்தினை பார்ப்பதன் மூலம் உங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும்.
நமது IRNSS செயற்க்கைகோள்கள்
இதுவரையில் நாம் 7 IRNSS செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளோம்.அவையாவன:
- IRNSS-1A (செயற்க்கைகோள்) – PSLV-C22 (ராக்கெட்)
- IRNSS-1B (செயற்க்கைகோள்)- PSLV-C24 (ராக்கெட்)
- IRNSS-1C (செயற்க்கைகோள்)- PSLV-C26 (ராக்கெட்)
- IRNSS-1D (செயற்க்கைகோள்)- PSLV-C27 (ராக்கெட்)
- IRNSS-1E (செயற்க்கைகோள்)- PSLV-C31 (ராக்கெட்)
- IRNSS-1F (செயற்க்கைகோள்)- PSLV-C32 (ராக்கெட்)
- IRNSS-1G (செயற்க்கைகோள்)- PSLV-C33 (ராக்கெட்)
அதில் 3 செயற்க்கைகோள்கள் மேலே சொன்ன “ஜியோ ஸ்டேஸ்னரி” வட்ட பாதையிலும். இன்னும் 4 செயற்கைகோள்கள் “ஜியோ சிங்க்ரனோஸ்” வட்ட பாதையிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. நீங்கள் மேலே பார்க்கும் போதே உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும் இது நமது இந்தியாவின் எல்லையை தாண்டி ரொம்ப தூரம் போகுற மாதிரி இருக்குதேன்னு. ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். இது நமது இந்திய எல்லையை தாண்டி சுமார் 1500கி.மீ வரையிலும் நமது அண்டை நாடுகளுக்கு பரவியிள்ளது. இலங்கை, பாகிஸ்தான், மியாண்மர், சைனா , பூடான் போண்ற நாடுகளுக்கு பரவியுள்ளது. இஸ்ரோவும், இந்தியாவும் பெருந்தண்மையுடன். நீங்கள் விருப்பட்டால் இந்த எல்லைக்குள் வரும் எங்களது செயற்கைகோள் தரவுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் இந்தியா விட்டுக்கொடுத்துள்ளது.
1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் தருவாயில் இந்தியா அமெரிக்காவின் ஜி பி எஸ் செயற்கைகோளகளை பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவிடம் அனுமதி கேட்டது அதற்கு அவர்கள் மறுத்து விட்டார்கள். இன்று நாம் நமக்கென ஒரு தனி வழிகாட்டும் செயற்க்கைகோளையே வின்ணில் செலுத்தி அதனை அண்டை நாடுகளுக்கு பெருந்தண்மையுடன் விட்டுக்கொடுக்கிறோம்.
இப்போது சமீபமாக நாம் அனுப்பிய IRNSS 1I என்ற செயற்க்கைகோளானது.ஏற்கனவே நாம் வின்னில் அனுப்பி தோல்வி அடைந்த IRNSS 1H என்ற செயற்க்கைகோளுக்கு மாற்றாக அனுப்பியுள்ளோம். இந்த 1H செயற்கைகோளானது. நாம் முதன் முதலில் அனுப்பிய 1A செயற்கைகோளில் ஏற்பட்ட அடாமிக் கடிகாரத்தில் (Atomic Clock Fail) ஏற்பட்ட கோளாரின் காரணமாக அந்த 1A செயற்க்கைகோளை மாற்றுவதற்காக அனுப்பட்டது.
உண்மையில் நாம் இந்த அனு கடிகாரங்களை அதாவது அடாமிக் கடிகாரங்களை ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான ESO விலிருந்து காசு கொடுத்து வாங்கியுள்ளோம். 2013 ஆண்டு இதனை பொருத்தி நாம் வின்னில் அனுப்பியிருக்க 2016 ஆண்டு ஜுலைமாதம் இது கோளாரானது. இது பற்றி இந்தியா , ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகத்திற்கு கேட்ட போது அவர்கள் தங்களுக்கும் இது போன்று கோளாருகள் பல் ஏற்படுகின்றன. என்று தட்டிகழித்தனர். இதனை பார்த்த இஸ்ரோவானது இனி இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து இந்த வகையாக அடாமிக் கடிகாரங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது தொடர்பாக ஒரு குழு அமைத்து பரிசீலித்து வருகிறது. .
Post a Comment