kuiper Belt Facts in Tamil | கைப்பர் பெல்ட் தமிழ்
கைப்பர் – எட்வர்த்
கைப்பர் பெல்ட், இதனை ஒரு சில சமயங்களில் கைபர்-எட்ஜ் வொர்த் பெல்ட் (kuiper-Edgeworth Belt) என்றும் அழைப்பதுண்டு
ஜெரால்டு கைப்பர் என்பவர்தான் முதன் முதலில் நமது சூரியக்குடும்பத்தில் பிற்பகுதியில் ஒரு தட்டு போன்ற இடத்தில் பலதரப்பட்ட வானியல் பொருட்கள் இருப்பதனை ஒரு கோட்பாடாக உலகுக்கு சொன்னவர். அதேபோன்று Kenneth Edgeworth என்பவர்தான் முதன் முதலில் இந்த நெப்டியூனுக்கு பிறகு இருக்கக்கூடிய பொருட்கள் ஆரம்பகாலத்தில் அதாவது சூரியன் உருவான காலத்திலேயே உருவாகி இருக்கலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து சொன்னவர்
இந்த கைப்பர் பெல்ட் ஆனது நமது சூரிய குடும்பத்திலிருந்து கிட்டத்தட்ட 20 வானியல் அலகுகள் தூரம் என்ற அளவிற்கு மிகவும் பெரியதாக காட்டுகின்றன
இதில்தான் நாம் ஒன்பதாவது கிரகம் என்று நினைக்கும் புளூட்டோ உள்ளது அது மட்டுமில்லாமல் புளூட்டோவை போன்றே அளவு கொண்ட ஹொவ்மே , மேக்மேக் ,போன்ற சிறிய கிரகங்களும் இங்குதான் உள்ளன.
இருக்கும் இடம்:
கைப்பர் பெல்ட் பகுதியானது நெப்டியூன் கிரகத்திலிருந்து அதாவது 30 வானியல் அலகு முதல் 55 வானியல் அலகு வரை நீண்டு இருக்கக்கூடிய ஒரு பகுதியாகும் இதில் முக்கியமான வானியல் பொருட்கள் இருக்கும் இடம் 40 முதல் 48 வானியல் அலகு என்று கணிக்கப்படுகிறது
உண்மைகள்
- கைப்பர் பெல்ட் பகுதியில் பனியால் ஆன வானியல் பொருட்கள் சிறிய அளவு முதல் சுமார் 100 கிலோ மீட்டர் அகலம் கொண்ட பொருட்கள் வரை இருக்கலாம் என நம்பப்படுகிறது
- இங்கு இருக்கும் ஒவ்வொரு வானியல் பொருட்களும் சூரியனை சுற்றி வர சுமார் 200 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவாக எடுத்துக் கொள்கின்றன
- இந்த கைபர் பகுதியில் ஒரு ட்ரில்லியன் வால்மீன்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது
- கைபர் பகுதியில் மிகப்பெரிய அளவினை கொண்டிருக்கும் சிறு கிரகங்கள் உள்ளன அவை புளூட்டோ, மேக் மேக், ஹவ்மே, வருனா,
- இந்த கைப்பர் பெல்ட் பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக நாம் அனுப்பிய விண்கலம் “நியூ ஹரைசோன்” 2015ஆம் ஆண்டு இதனை அனுப்பினோம்
- விண்வெளி யாளர்கள் ஹபிள் தொலைநோக்கியின் மூலமாக நமது சூரிய குடும்பத்தில் காணப்படும் கைப்பர் பெல்ட் பொருட்களை போன்று அருகில் இருக்கக்கூடிய ஒரு சில நட்சத்திரங்களுக்கும் இதுபோன்ற பொருட்கள் இருப்பதை கண்டறிந்து உள்ளனர்
- உதாரணம் HD 138664 in the constellation Lupus, and HD 53143 in the constellation Carina
Post a Comment