3rd Launch pad at sriharikota for gaganyaan | இஸ்ரோ மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் "ககன்யான்"
2022 ல் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ள ககன்யான் மிஷனுக்காக இஸ்ரோ தற்போது மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்திய குடிமகன் மூவரை தேர்வு செய்து அவர்களை விண்ணில் அதாவது (Low earth Orbit) ல் 5-7 நாட்கள் உலவ விடவேண்டும் அதுவும் 2022 க்குள் இது தான் பாரத பிரதமரின் கட்டளை.
இதனை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள இஸ்ரோ. இந்த மனிதர்களை வின்ணில் அனுப்பு திட்டம் பற்றி 2004 ஆண்டு முதல் திட்ட மிட்டு வந்துள்ளது.(Space capsule recovery experiment, Crew module atmospheric re-entry & pad abort test) அதில் விண்வெளி பாதுகாப்பு பெட்டகம் , குழுவினரை பத்திரமாக வைத்திருக்கும் கேப்சூல் பாதுகாப்பு சோதனை, மற்றும் ஆபத்து கால குழு பாதுகாப்பு பெட்டகம். மேலும் வளிமண்டல சோதனை , பாரசூட் பரிசோதனை போன்ற மிக முக்கியமான சோதனைகள் முடிவுற்ற நிலையில் தற்போது இஸ்ரோ. இதற்கான. ராக்கெட் ஏவுதளம் மறு சீறமைவு அல்லது புனரமைவு பனியில் ஈடுபட்டுவருகிறது.
மூன்றாவது ஏவுதளம்:
இஸ்ரோ வானது 2 ராக்கெட் ஏவுதளங்களை கொண்டுள்ள ஒரு விண்வெளி மையம். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்த இரண்டும் தற்போது முழுமையாக உள்ளன. இதில் ஏதேனும் ஒன்றினை மறு புனரமைக்க வேண்டுமென்றாலும். அது இஸ்ரோவின் பல மிஷன்களை பாதிக்கும். இதனால் இஸ்ரோவானது “சிறியவகை ராக்கெட் ஏவுதளம் ஒன்றை” மேற்கு கடற்கரை பகுதியான குஜராத் பக்கம் பார்த்து வருவதாகவும் . அப்படி குஜராத் பகுதிகளில் ஒரு புதிய ராகெட் ஏவுதளமானது அமைக்கப்படுமாயின் அது முற்றிலுமாக சிறிய வகை ராக்கெட் ஏவுதளமாக அமையும் என்றும் இஸ்ரோ அறிவித்து உள்ளது. இருப்பினும் இந்த செய்தி உறுதியானது கிடையாது. இஸ்ரோ தனது மனித விண்வெளி குழுவினை அனுப்புவதற்கு. ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இரண்டில் ஒன்றைதான் மறுபுனரமைவு செய்ய வேண்டும்.
GSLV Mk3
இந்தியாவின் பாகுபலி என செல்லமாக அழைக்கப்படும். GSLV mk3 ராகெட் தான் ககன்யான் குழுவினரையும் , அவர்களுக்கு அடைக்களமாகவும் இருக்கும் பகுதிகளையும் விண்ணில் கொண்டு செல்லும் ஆனால் இந்த ராக்கெட் இதுவரை மனிதர்களுக்கு ஏற்றதாக மாற்றப்படவில்லை. அதனால் GSLV mk3 ராக்கெடிலும் ஒரு சில மாறுதல்களை செய்து இதனை மனிதர்கள் பிரயானிக்க ஏதுவானதாக மாற்றும் செயலிலும் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.
குழு ககன்யான்
இந்தியாவின் 3 குடிமகன்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள் அவர்கள் ஆண்களா அல்லது பெண்களா அல்லது இருவரும் இருப்பார்களா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் தேர்ந்தெடுக்கப்படும் குழுவானது ரஷ்யா சென்று அங்குள்ள பயிற்சிகளையும் முடித்தால் தான் அவர்கள் விண்வெளி செல்ல தகுதியானவர்கள் என்ற சான்றிதழ் அளிக்கப்படும் . அதாவது ஆஸ்ரோனெட் தேர்வு செய்வதில் இந்தியா ரஷ்யாவின் உதவியை நாடவுள்ளது.
3ஆவது முறைதான்
இஸ்ரோ ஏற்கனவே சொன்னது போல் இரண்டு முறை சோதனை ஓட்டங்கள் அதாவது மறு புனரமைவு செய்யப்பட்ட ஏவுதளத்திலிருந்து, மறு புனரமைவு செய்யப்பட்ட GSLV mk3 ராக்கெடினை வைத்தும் இரண்டு முறை சோதனை ஓட்டம் செய்யப்படும் மூன்றாவது முறைதான் மனிதர்கள் குழு அதனும் செல்லும் என்றும் இஸ்ரோ அறிவித்திறுந்தது. அதன் காரனமாக 2020 ஆம் ஆண்டு முதல் சோதனை செய்யப்படும் என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியுள்ளார்.
Download Our App
More Posts to Read on:-
- “Perseverance” Mars 2020 Rover Name Contest Winner
- ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5
- Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்
- Upcoming ISRO Missions in 2020 (Video)
- திடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா?
Post a Comment