Insight Land on Mars Successfully | நாசாவின் இன்சைட் லேண்டர் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிரங்கியது

நாசா அமைப்பானது செவ்வாயின் உள்பகுதிகளை அதாவது அந்த கிரகத்தின் கட்டமைப்புகளை interior மூலமாக ஆராய வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்ட ஒரு லேண்டர். உங்களுக்கு லேண்டர் என்றால் என்ன என்று தெரியும் தானே?

ஒரு கிரகத்தின் மேற்பரப்பில் தரையிரங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் இயந்திரத்தின் பெயர்தான் லேண்டர். நாசாவானது இந்த ஆண்டு மே மாத வாக்கில் இன்சயிட் என்ற ஒரு செவ்வாய்கிரகத்திற்கான லேண்டரை ஏவியது. அந்த லேண்டரானது இன்று அதாவது இந்திய நேரப்படி 26ம் தேதி நவம்பர் மாதம்  அதிகாலையில் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிரங்கியது.

ஒரு விதமாக துளையிடும் இயந்திரம் மூலமாக இது செவ்வாய்கிரகத்தின் உள் கட்டமைப்பை ஆராயும் எனவும் நாசா தரப்பில் கூறியுள்ளது. நேற்று அதாவது அமெரிக்காவில் 26 ஆம் தேதி. நாசாவானது இன்சயில் லேண்டர் தரையிரங்குவதை  நேரடியாக ஒளிபரப்பும் செய்தது இதனை பல நூறு கனக்காக மக்கள் நேரடியாக கண்டுகளித்தனர்.



Download Our App

More Posts to Read on:-



No comments