CHEOPS Details in Tamil | Exoplanet Satellite in Tamil | Space News Tamil

இதற்கு போன பதிவில் நாம் இந்த எக்ஸோ பிளானட் செயற்கைகோளில் பதிய வைத்து இருக்கும் குழந்தைகளின் ஓவியங்கள் பற்றி பார்த்தோம். இப்போது நாம் இந்த செயற்கைகோளை பற்றி வேறு பல செய்திகளை தெரிந்து கொள்ளுவோம்.

CHEOPS என்றால் Characterizing Exoplanet Satellite என்று அர்த்தம். இந்த செயற்க்கைகோளானது. ஐரோப்பிய விண்வெளி கழகத்தால் 2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவ தீர்மானிக்கப்பட்டுள்ள ஒரு விண்வெளி தொலைநோக்கியாகும். விண்வெளி தொலைநோக்கி என்ற உடன் நீங்கள் பெரிய அளவுக்கு கற்பனை செய்ய வேண்டாம். இது தான் ஐரோக்கிய விண்வெளி கழகத்தால் விண்ணில் ஏவ உள்ள மிக குறைந்த செலவுடைய செயற்கைகோள். ஆம் இது வெறும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே செலவினங்களை உடைய 3.5 (mission duration )ஆண்டுகள் அவகாசம் கொண்ட ஒரு சாதாரன மிஷன்.

ஆனால் அதை எதற்கு தொலைநோக்கியாக அனுப்புகிறார்கள் . என்ற கேள்வி எழுந்திருக்கும். . இந்த செயற்கைகோளானது ஏற்கனவே கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி கண்டறிந்த 2700க்கும் மேற்பட்ட  எக்சோ பிளானட்களில் குறிப்பிட்ட  ஒரு சில எக்ஸோ கிரகங்களை மட்டுமே தேர்வு செய்து அதனை ஆராயும். என கூறப்பட்டுள்ளது.

எக்ஸோ கிரகங்களின் ஆரங்களை அளவிடுவது தான் CHEOPS இன் முக்கிய பனியாக இருக்கம் எனவும். இதனை Transit எனும் முறைய பயன் படுத்தி இது கண்டறியும் என்றும் அறிவித்துள்ளனர். ஆனால் இன்னெரு விஷயத்தினை நீங்கள் மறந்து விடக்கூடாது . இது கண்டறியும் அனைத்து கிரங்களும் ஏற்கனவே நாம் கெப்ளர் மூலமாக கண்டறிந்து. மேலும் பூமியில் உள்ள Land Telescope மூலமாக அதன் எடை , விட்டம் போன்றவற்றை அளவிட்டது தான். இதனை உறுதி செய்து கொள்ளத்தான். இந்த CHEOPS செயற்கைகோளை செலுத்த உள்ளனர்.

ஏற்கனவே ஆகஸ்டு 17 ஆம் நாம் 2018 அன்று பாஸ்டன் நகரில் நடைபெற்ற ஒரு அறிவியல் மாநாடும் இதற்கு முக்கிய காரணம் என்றும் கருதப்படுகிறது. இதில் பங்கு பெற்ற ஒரு எக்ஸோ பிளானட் ஆராச்சி குழுவானது ஒரு புதிய தகவலை சொன்னனர். அதனை நீங்கள் தெரிந்து கொள்ள ….. Click Here

Source: wiki , ESA

PodCast:

Soon

No comments