Interesting Space facts in Tamil | Facts of Space in Tamil | Space News Tamil
இப்போது ஓரிரு வின்வெளி சம்பந்தபட்ட செய்திகளை பார்ப்போம்.
1.விண்வெளியில் சப்தம் கிடையாது
விண்வெளியில் உங்களால் சப்தம் எழுப்ப முடியாது. ஏனெனில் ஒலியானது கேட்பதற்கு நமக்கு ஒரு ஊடகம் தேவை . இதனை நமது வளிமண்டலத்தில் உள்ள காற்று செய்யும். வின்வெளியில் காற்று இல்லாததால். அங்கு சப்தம் யாருக்கும் கேட்காது. நமது விண்வெளி அறிவியலாலர்கள். ரேடியே அலைவரிசைகளை நம்மால் அனுப்பவும் பெறவும் முடியும் என்பதால் இதனை பயன்படுத்தி . விண் கலங்களை தொடர்பு கொள்கின்றனர்.
2.450 டிகிரி செல்சியல் கிரகம்தான் அதிக சூடான கிரகம்
நமது சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் என்றால் அது வெள்ளி கிரகம் தான். ஆனால் புதன் கிரகம் தான் சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ளது. ஆனால் புதன் கிரகத்தில் வளி மண்டலம் இல்லாததால் அங்கு அதிக வெப்பம் இருக்காது. வெள்ளி கிரகத்தில் அடர்ந்து வளிமண்டலம் காணப்படுவதால் இந்த கிரகம் வெப்பத்தினை வெளியிடாமல் அதிக வெப்பநிலைக்கு உள்ளாகிரது.
3.செவ்வாய்: வருங்கால பூமி
நமது சூரிய குடும்பத்தினை பொருத்த வரையில், பூமிக்கு பிறகு மனிதர்வாழும் தகுந்த கிரகமான செவ்வாய் இருக்கவும். இதில் மனிதர்களை காலனியாக குடியமர்தவும். பல திட்டங்கள் செய்து வருகிறது. இதற்கு முதல் காரனமாக 1986 ஆம் ஆண்டு நாசா செவ்வாயில் கண்டறிந்த நுன்ணிய உயிரினங்களின் புதைபடிமங்கள் தான்.
4.கனக்கில்லா நட்சத்திரங்கள் அல்லது சூரியன்கள்
விண்வெளியில் எவ்வளவு நட்சத்திரங்கள் உள்ளன என்பது யாருக்கும் தெரியாத ஒரு விஷயம். பல தரப்பட்ட கனக்கீடுகளுக்கு பிறகு நமது பால்வழி அண்டத்தில் தேராயமாக 200-400 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம் என்றும். நமது அருகில் இருக்கும் நட்சத்திரமான ஆன்றோமிடா கேலக்ஸியில் 1 டிரில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம் எனவும் (தேராயமாக) கணக்கிடப்பட்டுல்ளது. இது போன்று கேலக்ஸிகள் எவ்வளவு உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. ஹா ஹா.
5. ரூபாய் 84,67,80,000.00 மதிப்புள்ள நாசாவின் வின்வெளி கவசம்
நாசாவின் விண்வெளியாலர்கள் பயன் படுத்தும் விண்வெளி கவசமானது இதனை ஸ்பேஸ் சூட் என்பர் இது முழுவதும் $12 மில்லியன் டாலர்கள் செலவாகும் இதல் 70 % தொகையானது அதன் பின்பக்க இருக்கும் ஆக்ஸிஜம் மாடுயூல் மற்றும் இதனை கட்டுப்படுத்தும் control Module உம் தான்.
6. அதிவேகமாக சுற்றும் நியூற்றான் நட்சத்திரம்: 4-40000 RPM
நியூற்றான் நட்சத்திரங்கள் தான் விண்வெளியில் அதிவேகமாக சுற்றும் இது ஒரு நிமிடத்திற்கு 4-40000 தடவை சுற்றும் . மிகவும் சுழற்சி குறைந்த நியூற்றான் நட்சத்திரங்கலை பல்சார் நட்சத்திரங்கள் என்பர் இதுவும் ஒரு நிமிடத்திற்கு 100 முறையாவது சுற்றிவிடும்.
7. ஒரு நாள் ஒரு வருடத்தினை விட அதிகம்.
நமது வெள்ளி கிரகம் அதன் தன்னைதானே சுற்றும் வேகம் குறைவாக இருப்பதால் இதன் ஒரு நாள் என்பது 243 பூமியின் நாட்களுக்கு சமமானது. ஆனால் இது சூரியனை ஒரு முறை சுற்றிவர வெறும் 225 (பூமியின்) நாட்களில் சுற்றிவந்து விடும். அதாவது ஒரு நாள் ஒரு வருடத்தினை விட அதிகம்
8. ஆன்ரோமிடா மற்றும் பால்வழி அண்டத்தின் மோதல்
இன்னும் 3.75 பில்லியன் ஆண்டுகளில் நமது கேலக்ஸியான பால்வழி அண்டமும் , நமது அண்டை கேலக்ஸியான ஆன்ரோமிடா அண்டவெளியும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் என்று விண்வெளியாளர்கல் கணித்துள்ளனர். ஆண்ரோமிடா கேலக்ஸியானது வினாடிக்கு 110 கி.மீ என்ற வீதத்தில் நமது கேலக்ஸியை நோக்கி வந்துகிட்டு இருக்குக்கு.
9. மிகப்பெரிய ஆஸ்டிராய்டு 1000 கிமீ விட்டம் உடையது
இது ஒரு தவறான புரிதல். முதன் முதலில் நாம் சீரிஸ் (சிரஸ்) எனும் ஒரு குட்டி கிரகத்தினை தான் ஒரு ஆஸ்டிராய்டு என தவறாக புரிந்து வைத்து இருக்கிறோம். செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இருக்கும் பகுதிதான் ஆஸ்டிராய்டு பெல்ட் இதில் இருக்கும் ஒரு பெரிய பொருள்தான் சிரிஸ் கிரகம் இதனை dwarf planet என்றும் அழைப்பர்
10. 99.86 % சூரிய குடும்பத்தின் எடையை சூரியனே எடுத்துக்கொண்டது
ஹீலியத்தாலும் , ஹைற்றஜனாலும் உருவான நமது சூரியனானது நமது சூரிய குடும்பத்தில் 99.86 சதவீத எடையை உடையது.நமது பூமியோடு ஒப்பிடும் போது இது 3,30,000 மடங்கு அதிக எடை கொண்டது,
மேலும் வின்வெளி பற்றிய உடனடி செய்திகளை தெரிந்து கொள்ள இனைந்திருங்கள் நமது ஆன்ட்ராய்டு செயலியை பதிவிறக்கு கொள்ளுங்கள்
Post a Comment