Ozone hole in northern hemisphere to recover completely by 2030 | குணமாகும் ஓசோன் படலம்
Ozone Layer Tamil
நாம் நம்முடைய புவியினை பாதுகாக்க வேண்டும் இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதனை நாம் செய்கிறோமோ இல்லையோ. புவி நம்மை காப்பாற்றும் வேலையினை சரிவர செய்துவருகிறது இதுவரை. எதுவரை என்றால் நாம் அதன் ஓசோன் படலத்தினை சேதப்படுத்தாதிருந்த வரையில் . ஓசோன் படலம் எதற்காக என உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நமது பூமியினை . அதி பயங்கரமாக பிரபஞ்ச கதிர்வீச்சுகளிலிருந்தும் , சூரியனின் புற ஊதா கதிர் வீச்சுகளிலிருந்தும் . இது நம்மை பாதுகாத்து வருகிறது, இந்த படலமானது 30 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலமையை விட இப்போது நல்ல நிலமையில் உள்ளது என்றும் . இன்னும் 12 வருடங்களில் . அதாவது 2030 வாக்கில் இது தானாக தன்னை குனப்படுத்திக்கொள்ளும் என்றும் Scientific Assessment of Ozone Depletion: 2018 என்ற அமைப்பானது கூறியுள்ளது. இதனை அவர்கள் World Meteorological Organization, என்ற அனைப்பில் சமர்ப்பித்து உள்ளனர்
குணமாகும் ஓசோன் படலம்:
2000 ஆவது ஆண்டில் நாம் ஓசோன் படலத்தினை பலமாக சேதப்படுத்தி இருந்தோம். பிறகு. உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு சபதத்தினை எடுத்தது அதுதான். ஓசோன் மீட்டெடுப்பு. இதற்காக நாம் செய்தது என்ன வென்றால்? ஒசோன் படலத்தினை சேதப்படுத்தும் செயல்களை தவிர்த்த்து தான் அதாவது . குளோரோ ஃப்லோரோ கார்பன் எனும் CFC வாயுக்களை தவிர்த்தது. மற்றும். பல வகையான ஓசோன் அழிக்கும் தன்மையுல்ள வாயுக்களை வெளியாக்கும் குளிர்சாதனங்களையும் நாம் இதுவரை குறைத்துள்ளோம். இதன் காரனமாக ஓசோன் தன்னை புதுப்பிக்க ஆரம்பித்தது. இப்போது ஆராய்சியாளர்கள். இதன் புதுப்பிக்கும் வேகமானது. இந்த நிலமையில் இருந்தால். இது இன்னும். 2030 ஆண்டுக்குள் முழுமையாக குணமடைந்து விடும் என கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலிலிருந்து. பூமியின் தெற்கு அறைக்கோளமானது அதாவது (southern hemisphere) 2050 ஆம் ஆண்டுக்கும் தன்னைத்தானே குணமாக்கி கொள்ளும் என்றும். மற்றும் துருவப்பகுதிகளில் உள்ள ஓசோன் ஓட்டையானது 2060 ஆண்டு வாக்கில் தன்னைத்தானே குனமாக்கிக்கொள்ளும் என்றும் அதில் அவர்கள் கூறியுள்ளனர்.
அதெல்லாம் சரி. நமது பூமியின் வெப்பநிலை தேராயமாக 2 டிகிரி அளவுக்கு கூடியுள்ளது உலகலாவிய அளவில் இதற்கு என்ன தீர்வு என்று கேட்கிறீர்களா? பொறுமையாக இருங்கள். நம்மால் முடிந்தவரை பூமிக்கு நல்லது செய்வோம். வாழ இடம் கொடுத்த இந்த பூமிக்கு நாம் முடிந்தால் நல்ல மரங்களை வரப்போம். மேலும் இதற்காக நாசாவின் ஐஸ் சாட்2 போன்ற செயற்கைகோள்கள். பலதரப்பட்ட தகவல்களை கொடுக்க உள்ளன. இதனை பயன்படுத்தி நாம் அதையும் சமாளிக்கலாம்
Download Our App
More Posts to Read on:-
Post a Comment