BepiColombo The Mission to Mercury Details in Tamil | பிபி கொலும்போ - புதன் கிரகத்திற்கான புதிய செயற்கைகோள்
பேர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதா? எனக்கும் அப்படித்தான் இருக்கும். இது ஏன் என்றால். இந்த மிஷனானது. ஐரோப்பியா விண்வெளி ஆராய்சி கழகம் மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆராய்சி நிறுவனத்தால் இனைந்து அனுப்பப்படும் ஒரு கூட்டு திட்டம். ஒரு வேளை அதனால் தான் இப்படி பெயர் வைத்திருக்கிறர்களோ!!!???
இந்த செயற்கை கோளானது நமது புதன் கிரகத்தினை ஆராய்சி செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதை அனுப்பியது போன மாதம் 20 ஆம் தேதி. அதாவது
20 அக்டோபர் 2018,
இந்த விண்கலத்தில் இரண்டு வெவ்வேறு ஆர்பிட்டர்கள் உள்ளன். ஆர்பிட்டர் என்றால் என்னவெண்று தெரியும் தானே உங்களுக்கு. அந்த கிரகத்தினுள் இறங்கி அதை பற்றிய விவரங்களை சேகரிக்கும் ஒரு கருவி. அந்த இரண்டு ஆர்பிட்டர்களின் பெயரானது.முதலாவது.
- மெர்குரி பிளானிடரி ஆர்பிட்டர் Mercury Planet Orbiter (MPO) இதனை அனுப்புவது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்.
- மெர்குரி மெக்னடோஸ்பியர் ஆர்பிட்டர் Mercury Magnetospheric Orbiter (MMO). இது ஜப்பானுக்கு சொந்த மானது
இந்த இரண்டு தனித்தனி ஆய்வுக்கலங்களும். இப்போது பிபி கொலும்போ விண்கலத்தின் உள்ளன. மேலும் இவை இரண்டும். புதன் கிரகத்தின் வட்டபாதையில் விடப்படம் ஆனால் 7 வருடங்கள் கழித்து தான்.
7 வருடங்களா? புதன் கிரகத்திற்கு செல்வதற்கு ஏம்பா 7 வருடம் என கேட்பது புரிகிறது. இதனை வடிவமைத்த விண்வெளி அறிஞ்சர்கள் கூறுகையில் . இந்த புதன் கிரகமானது நமது சூரியனை மிகுந்த நெருக்கத்தில் சுற்றி வருகிறது என்றும். நாம் மிகவும் வேகமாக செலுத்தும் பிபிகொலும்போ விண்கலமானது சூரியனின் ஈர்ப்பு விசையால் . புதன் கிரகத்தினை அடைவதற்கு முன்னரே. சூரியனில் விழ வாய்ப்பு உள்ளது என்றும். இந்த பிபிகொலும்போ விண்கலத்தின் வேகத்தினை குறைப்பதற்க்காகவே நாம் இவ்வளவு காலத்தினை எடுத்துக்கொள்கிறோம் என்றும் அந்த குழுவில் உள்ள இஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.
2018 ல் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலமானது 2020 ஆம் ஆண்டுகளில் நமது பூமியையும் வெள்ளி கிரகத்தினையும் சுற்றிவரும் படி செய்துள்ளனர். அதன் பின்னர் 2021ல் வெள்ளி கிரகத்தினை சுற்றிவரும் இது பின்னர் 2021 முதல் 2025 வரை புதன் கிரகத்தினை சுற்றிவரும் என்றும் கூறியுள்ளனர். See the Beautiful Images of Venus
இதனை பற்றிய மேலும் விவரங்களை நாம் வரும் பதிவுகளில் பார்ப்போம்.
மேலும் விவர்ங்களுக்கு நீங்கள் நமது இனையதளத்தினை Subscribe செய்து வைத்துக்கொள்ளுங்கள். நன்றி
Post a Comment