Facts about Sun in Tamil | சூரியனை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
சூரியன் என்பது நமது முன்னோர்களால் கடவுளாக பார்க்கப்பட்ட ஒரு பொருள். ஆனால் அதெல்லாம் அந்த காலத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்களால் தான். இப்போது அறிவியல் முன்னேறிவிட்டது நமது சூரியனை ஆராச்சி செய்ய சூரியனுக்கே விண்கலங்களை விடும் அளவுக்கும். பார்க்கர் சோலார் புரோப்
அந்த சூரியனை பற்றிய ஒரு சில சுவாரசியமான செய்திகளை இங்கு பார்ப்போம்:
1. சூரியனின் அளவு
1.989 × 10^30 kg எடையுடைய இந்த நட்சத்திரமானது நமது பூமியை போல் 3,30,000 மடங்கு அதிக எடையுடையது. வியாழன் கிரகத்தினை போல் 75 மடங்கு அதிக எடை யுடையது.
2. ஒரு மில்லியன் பூமி கொள்ளும் அளவு பெரியது
சூரியன் பெரியதாக இருப்பதால் நமது பூமிகிரகத்தினை அதனுள் வைத்தால் கிட்டதட்ட நீங்கள் 1 மில்லியன் பூமிகளை சூரியனை வைத்து அடைக்க முடியும். அவ்வளவு பெரியது.
3.பூமியை உன்ணும் சூரியன்
சூரியனில் நடக்கும் அனுகரு இனைவு நிகழ்வின் மூலமாக எல்லா ஹைற்றஜன் அனுவும் எரிந்து முடித்த பிறகும் சூரியன் கிட்டதட்ட 130 மில்லியன் வருடங்களுகு எரிந்து கொண்டு இருக்கும் இந்த நிகழ்வின் போது அதன் விரிவடையும் நிகழ்வு ஏற்படும். அப்போது சூரியனானது புதன் , வெள்ளி மற்றும் பூமியையும் உண்ணும் அளவு பெரியதாக மாறும் அப்படி மாறிய சூரியனைதான் சிவப்பு அரக்கன் என்பர் (அதாவது Red Giant)
4. சூரியனில் நடக்கும் அனுக்கரு இனைவு
நமது சூரியனுக்கு ஏது இவ்வளவு வெப்ப ஆற்றல் என்று பல கேள்வி வந்திருக்கும், இதற்கு காரணம். சூரியனில் நடக்கும் அனுக்கரு இனைவு எனும் நிகழ்ச்சிதான். சூரியனில் நான்கு ஹைற்றஜன் அனுக்கள் ஒரு ஹீலியன் அனுவில் இனைக்கப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுவதால் அது அதிக வெப்ப ஆற்றலை வெளியிடுகிறது.
5. மிகச்சரியான கோள வடிவம்:
இயற்கையாக இது போன்று அமைவது மிகவும் அறியது. சூரியனானது மிகவும் சரியான கோளவடிவத்தினை பெற்றுள்ளது. அதன் அளவில் மத்திய ரேகை பகுதியில் உள்ள விட்டத்திற்கும், துருவ பகுதியில் உள்ள விட்டத்திற்கும் வெறும் 10 கி.மீ மட்டும் தான் வித்தியாசம். இது ஒரு மிகச்சரியான கோளவடிவம் கொண்ட நட்சத்திரம் .
6. வினாடிக்கு 220 கி.மீ என்ற வேகத்தில் பயனிக்கும் சூரியன்
நமது பூமி சூரியனை சுற்றிவருகிறது சூரியனானது அண்டத்தின் மையத்தினை சுற்றி வருகிறது. நமது சூரியனானது அண்டத்தின் மையத்திலிருந்து தோராயமாக 24,000 – 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதனை வைத்து நமது சூரியனானது அண்டத்தின் மையத்தினை தோராயமாக 225-250 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றிவரும் என கண்டறிந்துள்ளனர். அப்படி சுற்ற வேண்டும் என்றால் சூரியன் வினாடிக்கு 220 கி.மீ என்ற வேகத்தில் நகரவேண்டும்.
7. எட்டு நிமிட பிரயானம்
ஒளியானது சூரியனில் இருந்து பூமிக்கு வந்து சேர 8 நிமிட காலம் எடுத்துக்கொள்ளும். சூரியனில் தொடர்ச்சியான் வெப்ப ஆற்றல் புவியை வந்து சேர சரியாக 8 நிமிடம் 20 வினாடிகள் ஆகும், இந்த கணக்கானது ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 கி.மீ என்றும். பூமி சூரியனில் இருந்து 150 மில்லியன் தொலைவில் உள்ளது என கடக்கிடும் போது கிடைக்கும் விடை. அவ்வளவு தான்
8. பாதி வயது முதிர்ந்த சூரியன்
நமது சூரியனின் வயது கிட்ட தட்ட 4.5 பில்லியன் ஆண்டுகள் என கனக்கிடப்பட்டுள்ளது. இதுவரை பாதியளவு ஹைட்ரஜ்னை எரித்து இன்னும் மீதி இருக்கும் பாதி ஹைற்றஜனை எரித்து முடிவதற்கு இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். இப்போது நமது நட்சத்திரமானது மஞ்சள் சிறிய நட்சத்திரம் (Yellow Dwarf star)
9. தன்னைத்தானே சுற்றும் சூரியன்
சூரியனானது அசையாமல் ஓரிடத்தில் உள்ளது என பல காலமாக நம்பப்பட்டு வந்தது. பிறகு சூரியனில் உள்ள ஒரு சில கரும்புள்ளிகள் கண்டறியப்பட்டன. இந்த கரும்புள்ளிகளின் மறைவு மற்றும் கண்ணுக்கு புலப்படும் செயலானது சூரியன் தன்னை தானே சுற்றிவருகிறது என்ற முடிவுக்கு வின்வெளியாளர்களை தள்ளியது. பிறகு தான் சூரியன் 25 பூமியின் நாட்களுக்கு ஒரு முறை தன்னைதானே சுற்றிவருகிறது என கண்டு பிடித்துள்ளனர்.
10. எதிர் திசையில் சுற்றும் சூரியன்:
நமது சூரியகுடும்பத்தில் வெள்ளிகிரகமும் இப்படித்தான் சுற்றிகிறது எப்படி என்று கேட்கிறீர்களா? அதாவது நமது பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றுகிறது அப்படி என்றால் கிழக்கில் சூரியன் உதிக்கும் மேற்கில் மறையும் ஆனால் வெள்ளி கிரகத்தில் அப்படியே தலைகீழ்தான். மேற்கில் உதித்து கிழக்கில் மறையும். சரி சரி, சூரியனில். ?? அதேதான். சூரியன் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றிகிறது. ஆனால் அதான் சூரியனாயிற்றே அங்கு எப்படி சூரியன் உதிப்பது வைத்து சொல்ல முடியும்.
11.மிக அடர்த்தியான காந்த புலம்:
சூரியனில் காந்த புயல் உருவாகும் போது சூரியனில் ஒரு சில பகுதியில் காந்த ஆற்றலை உருவாகும். அப்படி ஒரு வாகும் போது solar flares உருவாகும் இதனையே நாம் கரும்புள்ளிகள் என்கிறோம். அப்படி உருவாகும் கரும்புள்ளிகள் (sunspots) கருப்பாக இருக்க காரணம்? அதன் அருகில் உள்ள வெப்பநிலையை காட்டிலும். அந்த இடத்தில் வெப்பம் குறைவாக இருப்பதால் தான்.
12. அரோராவை உருவாக்கும் சூரியன்
ஆஸ்திரேலியா பகுதிகளில் உருவாகும் அரோராக்கள் சூரியனில் மேற்பகுதி(கரோனா)யில் உருவாகும் சூரிய காற்றினால் உருவாகிறது. Solar Wind என்பது இதனை அதிக சூடான மின்னூட்ட துகள்கள் அல்லது Charged Particle என்று கூறுவர்
13. சூரியனின் வளிமண்டலம்
இது மூன்று வகைகளை கொண்டது.இதனி போட்டோ ஸ்பியர், குரோமே ஸ்பியர், மற்றும் கரோனா என்பதுதான்.
நமது சூரியனானது எந்த வகைய சார்ந்தது. நமது அண்டவெளியில் கணக்கில்லாத நட்சத்திரங்களை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் நமது சூரியனை G V Star என்ற கணக்கில் வைத்துள்ளனர், இதற்கு வகை பெயரும் உண்டு அதுதான் மஞ்சல் சிறு நட்சத்திரம் (Yellow Dwarf Star), இது போன்ற நட்சத்திரங்களை அதன் மேல் பகுதி வெப்பநிலையை பார்த்து வகைப்படுத்துவார்கள். அதாவது 5027-5727 டிகிரி செல்சியல் இருகும் நட்சத்திரங்களைதான்.
இதற்கு வேறு ஏதாவது பெயர்கள் உண்டா? என்றால் ம்ம்ம்ம்ம்ம். அறிவியலாலர்கள் பல நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்து பெயர்கள் வைத்துள்ளனர். ஆனால் நமது சூரியனுக்கு எந்த ஒரு சிறப்பு அறிவியல் பெயர்கள் இல்லை ஆனான். சூரியனை SUN or SOL என அழைப்பார்கள்.
for PodCast Click here
Post a Comment