Gaia Telescope Finds "Ghost Galaxy" | நிழல் கேலக்ஸி ஆன்ட்லியா 2 தமிழ் விவரங்கள்.


விண்வெளியில் புதியாக கண்டறியப்பட்ட நிழல் அண்டம் அதாவது கோஸ்ட் கேலக்ஸி (Ghost Galaxy) விண்வெளியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது நமது பால்வழி அண்டத்திற்கு வெளியே உள்ள ஒரு மிகவும் லேசான கேலக்ஸி எனவும் அதாவது அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியாது இதனை (faint galaxy) என்றும் அறிவியலாலர்கள் கூறுகின்றனர்.

காயா தொலைநோக்கி (Gaia Telescope)


இது ஐரோப்பிய வின்வெளி கழகத்தால் அனுப்பப்பட்ட காயா Gaia தொலைநோக்கியின் பழைய பதிவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. காயா தொலநோக்கியின் நோக்கமே பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தையும் கண்டறிந்து அதனை ஒரு 3D மாடலாக உருவாக்கிட வேண்டும் என்பது தான். இதுவரை காயா தொலைநொக்கியானது 1.7 பில்லியன் நட்சத்திரங்களை கண்டறிந்து மேப் செய்துள்ளது.

நிழல் கேலக்ஸி : ஆன்ட்லியா 2 (Ghost Galaxy :Antlia2)

சர்வதேச விண்வெளியாளர்களின் குழு ஒன்று இதனை கண்டறிந்து உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆனால் அவர்கலால் கூட இதனை பற்றி முழு விவரங்களையும் கூறிவிட முடியாது. இதற்கு அவர்கள் ஆன்ட்லியா (Antlia 2) என பெயரிட்டுள்ளனர். இது நமது பால்வழி அண்டத்தின் வெளிப்பகுதியில் இருந்து 1,30,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்ட்லியா 2 என்ற நிழல் கேலக்ஸியானது கிட்டத்தட்ட LMC (Large Magillan Cloud) அளவுக்கு பெரியதாக இருக்கலாம் எனவும், மேலும் இது சாதாரனமாக இருக்கும் கேலக்ஸிகளை விட 10,000 மடங்கு மங்களானது என்றும் அறிவித்துள்ளனர்.

இதன் மங்கள் தண்மைக்கு காரணமாக டார்க் எனர்ஜி கூறப்படுகிறது. உங்களின் கருத்து என்ன .??? கீழே பதிவிடுங்கள்.

No comments