GSAT-11 returns to Guiana for December launch | விண்ணில் ஏவ தயாராகும் ஜிசாட் 11
டிசம்பர் 4 ஆம் தேதி வின்னில் ஏவுவதற்காக , இந்தியாவின் மிகவும் அதிக எடை உடைய தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட்11 திரும்பவும் ஃப்ரஞ்ச் கயானா சென்றுள்ளது.
நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்போம். சரியாக சொல்லவேண்டும் என்றால் கடந்த ஏப்ரல் மாதம் இது பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது கயானாவிலிருந்து. ஏனெனில் இஸ்ரோ இதற்கு முன்னால் அதாவது மார்ச் மாதம் அனுப்பிய ஜிசாட் 6A எனும் ஒரு செயற்கைகோள் , வின்ணில் ஏவிய ஒரு சில மனிநேரங்களில் மறைந்து போனது. அதாவது அதனுடன் பூமியின் தொடர்பு விடுபட்டது. இதன் காரணமாக கயானாவில் உள்ள ஜிசாட் 11 என்ற செயற்க்கைகோளினை நாங்கள் ஒரு சில மாற்றங்கள் செய்வதற்காக திரும்ப எடுத்துக்கொள்கிறோம் என இந்தியா கூறி அதனை ஏப்ரல் மாதமே திரும்ப பெற்றது. பிறகு பல வித வாக்கு வாதங்களும். பேரங்களும் நடந்தபிறகு . ஒரு வழியாக இதனை டிசம்பர் 4 ஆம் தேதி விண்ணில் ஏவிதர ஐரோப்பிய நிறுவனமான ஏரியன் குழுமம் ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து இஸ்ரோ வானது இந்த ஜிசாட் 11 என்ற ஹெவி சாட்டிலைட்டை நவம்பர் 3 ஆம் தேதி கயானாவுக்கு அனுப்பியது.
அது தற்போது ஐரோப்பிய கடற்கரை பகுதியாக Kourou வில் உள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த ஜிசாட் 11 மற்றும் ஜிசாட் 29 என்ற இரண்டும் இந்தியாவின் இண்டர்னெட் வேகத்தினை அதிகரிக்க உதவும் தொலைதொடர்பு செயற்கைகோள்களாகும். (ஜிசாட் 29 ஸ்ரீஹரிகோட்டாவிலுருந்து நவம்பர் 14 ஆம் நாள் விண்ணில் ஏவ திட்ட மிடப்பட்டுள்ளத்.)
Source: the Hindu
Post a Comment