Gravitational Wave in Tamil - விளக்கம்
நாம் நமது பூமியில் ஈர்ப்பு விசையினை உணர்ந்துள்ளோம். அது புவியின் ஈர்ப்பு விசை. இது எப்படி வருகிறது ? என இப்போது பார்ப்போம்.
ஈர்ப்பு விசை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. புவியீர்ப்பு மற்றும் ஈர்ப்பு விசை, அதாவது Gravity and Gravitational Force,
ஒரு பொருள் எவ்வளவு எடை அதிகமாக இருக்குமோ அதே அளவுக்கு அதன் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈர்ப்பு விசை என்பர்,
அதேபோல் ஈர்ப்பு விசை அதாவது Gravitational Wave என்றால்?
இதனை விண்வெளியில் ஏற்படும் சிற்றலைகள் என கூறலாம். அதாவது நமது விண்வெளியினை ஒரு பெரிய ரப்பர் துணி போல நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது இதில் நீங்கள் ஒரு அதிக எடையுள்ள பொருளை வைத்தால் அந்த
ரப்பர் துணியில் இது ஒரு பள்ளத்தினை உருவாக்கும். மேலே உள்ள படத்தினை பாருங்கள்.
அப்படி இருக்கும் தருனத்தில் நீங்கள் அந்த பொருளைநோக்கி வேறு ஒரு பொருளை அனுப்பினால்
அது ஒரு வட்டபாதையில் சுற்றி வருவதை பார்க்கலாம். அதே போல் விண்வெளியிலும் நடை பெறுகிறது. ஒரு கிரகம் எவ்வளவு எடையில் அதிகமோ. அந்த அளவு அதன் ஈர்ப்பு விசை இருக்கும். இப்போது புரிகிறதா. நமது சூரியனை ஏன் கிரகங்கள் சுற்றி வருகிறது என்று.
(இதற்கு காரனம் நமது சூரியன் மற்ற கிரகங்களை காட்டிலும் அதிக எடை உடையது.)
சரி இப்போது Gravitational wave விசயத்திற்கு வருவோம்.
அதல்லாம் சரி, இப்போ நமது சூரியன் தான் அதிக எடையுடைய பொருளா? விண்வெளியினை பொருத்த வரையில். அப்படி அல்ல. நமது சூரியன் சாதாரண ஒரு நட்சத்திரம். இதனை விட அதிக எடையுடைய நட்சத்திரங்கள் நமது பால்வழியில் உள்ளன. இவைஅனைத்தையும் விடை அதிகமாக எடை உடையது தான் . கருந்துளைகள். Black holes அதற்கு பிறகு நியூற்றான் நட்சத்திரம், அதன் பிறகு சாதாரன நட்சத்திரம்
- Black Holes (More Heavy)
- Neutron Star (slightly heavy)
- Normal Star (ordinary Heavy)
இப்போது நாம் இந்த மூன்று பொருட்களின் ஏதேனும் இரண்டு பொருட்கள் விண்வெளியில் ஒன்றை ஒன்று சுற்றிவரும் படி அமையுமாயின். அது நமது விண்வெளியில் அதிகமாக சிற்றலைகளை ஏற்படுத்தும். (அதாவது நமது ரப்பர் துணி)அப்படி ஒரு வேளை இரண்டு அதிக எடையுடைய கருந்துளைகள் தண்ணைத்தானே சுற்றிவரும் படி அமையுமாயின் அவை இரண்டும் சேர்ந்து நமது விண்வெளியில் சில சிற்றலைகளை ஏற்படுத்தும். ஏனென்றால் இரண்டும் அதிக எடையுடையது ,. அது போன்று வரும் சிற்றலைகலைதான் gravitational waves என கூறுவர்.
நாம் நமது பூமியில் இதனை கண்டறிவதற்காக LIGO எனும் ஒரு தொழில் நுட்ப கருவியினை கண்டறிந்துள்ளோம். இந்த நூற்றாண்டின் நவீன கண்டு பிடிப்பில் இதுவும் உள்ளது.அப்படி ஏற்படும் சிற்றலைகள் அந்த பகுதியில் கடந்து செல்லும் போது அந்த ஒட்டு மொத்த விண்வெளியினையே சுருக்கி, விரிக்கும் தண்மை உடையது. அப்படி ஏற்படும் சிற்றலைகலை தான். நாம் gravitational wave என கூறுகிறோம்.
Source:
PODCAST:
Post a Comment